புதிய அத்தியாயம் தொடங்கினது அன்று.
புதிராய் மனம் மிக பதைகின்றது இன்று,
புனிதமான நட்பு உதயமானதும் அன்று.
புவியினில் குமுறி அழுகிறேனே இன்று.
உன்னோடு உறவான கல்லூரி காலம்.
உயிரையும் உருக்குதே கனவிலே நாளும்.
தொடர்கதையாய் நீண்ட நட்பை,
விடுகதையாய் விட்டு சென்றாய்.
வெற்றி என்று மறுபேர் கொண்டாலும்
வெகுளித்தனமாய் விரைந்து சென்றாயே.!.
கவிதையான காவியம் நீ.
காலம் கடந்த தோழன் நீ.
பழகிய காலம் கண்ணுக்குள்ளே
பழங்கதைகள் என் நெஞ்சுக்குள்ளே.
உடல் மட்டும் சென்றால் என்ன?
என் ஊனோடு உறைந்தவன் நீயடா .
காலன் தான் கொண்டு சென்றான் உன்னை.
காலம் நான் மறவேனே உன்னை.
சொற்கள் சொல்ல இயலுமா?
சென்ற கால நட்பின் ஆழம்.
குழப்பமான என் வலி.
கண்ணோர நீர் துளி
கவிதையிலே அஞ்சலி...

No comments:
Post a Comment