
ஓராண்டு கடந்து விட்டதா.?
நினைவுகள் மறந்து விட்டதா?
ரயில் சிநேகம் போல தான் நீ
நடுவில் விட்டு சென்றாயே.
ரயில் நண்பன் போல் தான் நான்
மறப்பேன் என்று நினைத்தாயோ.
காலம் கடந்த என் தோழனே...
மடை திறந்த வெள்ளம் போல அன்பில்,
படை என தோழர்கள் நாங்கள் இருக்க,
விடை கொடுத்து சென்றது ஏனோ?
விடை நான் தேடித்தான் பார்க்கிறேன் -
இடையில் வினாவிடமே நான் தோற்கிறேன்.
உன்னுடன் பகிர்ந்த வாதங்கள்
அன்புடன் உதிர்த்த வார்த்தைகள்
கண்ணுடன் கலந்தன வண்ணங்கள்.
கண்கள் மூடி கனவில் மிதக்கிறேன்.
கனவில் மீண்டும் உன்னுடன் பிறக்கிறேன்.

No comments:
Post a Comment