Tuesday, October 19, 2010

என் உள்ளம் கவர்ந்த கள்வனே.

நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே...

இந்த திங்கள் எனக்கு நீங்கள் தந்த பரிசு..
உங்கள் பேச்சும் உங்கள் வழக்கமும் என் மனதில் அழமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன என்பதனை என்னால் மறுக்க இயலாது.

இதுவரை என் மனதில் இப்படி ஒரு தாக்கம் ஏற்படவில்லை என்று பொய் சொல்லவில்லை நான்.
கோடி நட்சத்திரத்தில் சிறப்பாய் தோன்றும் சந்திரனை போல.. இந்த முறை இது அதிக சிறப்பாக தோன்றுகிறது.

ஆயினும்.நீங்கள் உருவாகிய இந்த தாக்கம் கோடையில் வீசும் குளிர் காற்று போல..
பாலைவனத்தில் பயணி ஒருவன் கண்ட நீரோடை போல. ஏங்கி அழுத சேய்க்கு கிடைத்த அமுதம் போல.

அழகிய வசந்தம் என் வாழ்விலும் வராதா என ஏங்கி கிடந்த தருணத்தில் மலர்ந்தது நம் நட்பு..
எல்லா நட்பும் காதலாகிவிடாது என்பது தாங்களும் அறிந்ததே..பழகிய சில நாட்களிலேயே புரிந்தது இது ஒரு புள்ளி அல்ல.. மூன்று தொடர் புள்ளிகள் என்று..
இதில் என் மனம் லயித்தது...சொல்லிவிட்டால் தவறாகிவிடும் என மனம் பதைத்தது.
ஆச்சரியமாக உங்கள் மனதிலும் ஒருசேர இந்த எண்ணம் தோன்றியது எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது..
வியப்பை வேகமாக விருப்பமாக வெளிகொணர்ந்து விட்டீர்கள்...
இந்த தாக்கம் அடுத்த பரிமாணத்திற்கு செல்லும் நாளை எதிர் பார்த்து காத்திருந்தேன்..

காயத்தில் இருந்த மனம் தான் என்றாலும், இதில் காதலுக்கு பஞ்சமில்லை.
ஆயினும் இது என் மன நிலை மட்டும் அல்லவே. தாங்களும் என் கூற்று உண்மை என கரம் கொடுப்பீர்கள்.
உங்கள் காயத்திற்கு நானும், என காயத்திற்கு நீங்களும்..
மறுமுறை ஒரு பெரும் காயத்தை தாங்க உங்களுக்கோ, எனக்கோ நிச்சயம் பெலன் இல்லை என்பது என எண்ணம்..
பாம்பறியும் பாம்பின் கால் என்பார்கள். சரி தான்.. உணர்ந்து கொண்டேன்..

என்னைபற்றி எனக்கு தெறியாத புதிய அர்த்தங்கள் உணர்கின்றேன்.
உங்கள் கரம் பற்றின மணித்துளிகளை என மனதில் அசை போட்டுக்கொண்டே பெருமூச்சொன்றை விட்டு செல்கிறேன்.
உங்கள் கரம் பற்றுவதாய் நினைத்து வெறும் காற்று மண்டலத்தில் என கையை வீசி நடக்கிறேன்.
உங்கள் இதழ் தீண்டிய மின்னல் பொழுதினை மனத்திரையில் படம் பிடித்து சுகிக்கிறேன்..

என்னை ரசிக்கும் உங்களை எனக்கு சொந்தமாக்கி, உங்கள் ஊனோடு உறவாட..
கவலை கரைக்கும் காதலியாக காதல் வரம் தந்துவிட்டீர்கள்...
உங்கள் கரம் பற்றி உங்கள் வாழ்நாள் முழுதும் உங்களுக்குச் சொந்தமான.
தோள் கொடுக்கும் தோழியாய், தாபம் தீர்க்கும் தாரமாய், தாங்கி நிற்கும் தாயாய் மாற்றும்
அந்த இனிய நன்னாளை எதிர் நோக்கி

கனாவில் காத்திருக்கும் காதலி.

No comments:

Post a Comment