ஓடு மீன் ஓட,
உறுமீன் வருமளவும்
தாங்கி நிற்குமாம் கொக்கு..
கொக்கு போல சிலையாகினேன் நான்
திக்கெங்கும் என் புகழ் பரவிடும் நாள்.
செக்கு என்று சுற்றி வரும் என்னை தான்.
பதறி போய் பிதற்றாமல் இல்லை.
கதறி நான் துக்கிக்காமல் இல்லை.
கடந்தகாலம் தான் நான் தவறி இருந்தேன்.
நடந்த மாயம் எண்ணி மருகி உடைந்தேன்.
முதல் படி ஆகினது இந்த ஏமாற்றம்.
முடிவல்லாமல் இது ஆனது மாற்றம்.
பிள்ளையாய் முதல் அடி சறுக்கினாலும்,
எல்லையை தாண்டுவேன் நிறுத்தினாலும்.
நீயும் உழுதாய் விதைத்தாய்.
நானும் உழுதேன் விதைத்தேன்.
உன் கனவு தேசத்தில் நீயும்
என் கடின தேசத்தில் நானும்.
கானல் என்றுமல்ல என் கடின தேசம்
காலம் தரும் என் வெற்றிக்கு சுவாசம்.
Thursday, December 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment